Deepak Chahar Practice Video: தம்பி கிரிக்கெட்டில் சாதிக்க, தீபக் சாகருக்கு பயிற்சி கொடுத்த மால்தி சாகர்!

Published : Mar 08, 2024, 02:40 PM IST
Deepak Chahar Practice Video: தம்பி கிரிக்கெட்டில் சாதிக்க, தீபக் சாகருக்கு பயிற்சி கொடுத்த மால்தி சாகர்!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தீபக் சாகருக்கு, அவரது சகோதரி மால்தி சாகர் பயிற்சி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இன்னும் 2 வாரங்களில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்கள் ஒரு குடும்பமாக இருக்கின்றனர். இதுதான் சென்னையின் வெற்றிக்கான காரணமாக பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் தான் காயம், அதன் பிறகு தந்தையின் உடல்நிலை என்று இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த தீபக் சாகர் தற்போது தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இதற்காக சாகரின் சகோதரி மால்தி சாகர் தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சி முகாமில் தீபக் சாகருக்கு கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் வேகத்தில் மெஷின் மூலமாக பந்து வீசும் பணியை மால்தி சாகர் மேற்கொண்டுள்ளார். இதில் பேட்டிங் செய்து ரன் அடிக்கும் முயற்சியில் தீபக் சாகர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மால்தி சாகர் கூறியிருப்பதாவது: இது எங்களது குடும்பத்தின் பயிற்சி. ஐபிஎல் தொடருக்காக தம்பியை தயார் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?