இந்த மாதிரி சாதனையைலாம் ஒரு தடவை பண்றதே கஷ்டம்.. மனுஷன் அசால்ட்டா 2 விதமான போட்டியிலயும் பண்ணிட்டாரு.. மலிங்கா மலிங்கா தான்

By karthikeyan VFirst Published Sep 7, 2019, 5:21 PM IST
Highlights

மலிங்காவிடம் 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 16 ஓவரில் வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 
 

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனானது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று தொடரை நியூசிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் அடித்தது. 126 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து வீரர்களை, தனது வேகத்தில் மளமளவென வீழ்த்தினார் மலிங்கா. மலிங்காவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் கோலின் முன்ரோ, ரூதர்ஃபோர்டு, கோலின் டி கிராண்ட் ஹோம், டெய்லர் ஆகிய நால்வரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சாதனை படைத்தார். 

மலிங்காவிடம் 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 16 ஓவரில் வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்த மலிங்கா, டி20 கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 
 

click me!