DC vs LSG: ராகுல் - ஹூடா அதிரடி அரைசதம்.. ஸ்டோய்னிஸ் சொதப்பல்.. டெல்லி அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த லக்னோ

Published : May 01, 2022, 05:26 PM IST
DC vs LSG: ராகுல் - ஹூடா அதிரடி அரைசதம்.. ஸ்டோய்னிஸ் சொதப்பல்.. டெல்லி அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த லக்னோ

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 195  ரன்களை குவித்து, 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவரும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணி ஆவேஷ் கானுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கௌதமை ஆடும் லெவனில் சேர்த்தது. டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, மோசின் கான், ரவி பிஷ்னோய்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக தொடங்கினார். 13 பந்தில் 23 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இணைந்து அடித்து ஆடி 95 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், தீபக் ஹூடா 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்களுக்கு ஷர்துல் தாகூரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் சோபிக்கத் தவறினார். ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் லக்னோ அணியால் 200 ரன்களை கடக்க முடியவில்லை. 20 ஓவரில் 195 ரன்கள் அடித்த லக்னோ அணி 196 ரன்களை டெல்லி கேபிடள்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் கோடிகளில் புரளும் வைபவ்! IPL-க்கு பின் இரட்டிப்பான பிராண்ட் மதிப்பு!
IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!