Bangladesh vs Pakistan டெஸ்ட்: லிட்டன் தாஸ் அபார சதம்.. வங்கதேசத்தை காப்பாற்றிய தாஸ் - முஷ்ஃபிகுர் ரஹீம் ஜோடி

Published : Nov 26, 2021, 06:24 PM IST
Bangladesh vs Pakistan டெஸ்ட்: லிட்டன் தாஸ் அபார சதம்.. வங்கதேசத்தை காப்பாற்றிய தாஸ் - முஷ்ஃபிகுர் ரஹீம் ஜோடி

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபாரமாக ஆடி சதமடித்தார் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்.  

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.

அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

வங்கதேச அணியின் டாப் 3 வீரர்களான ஷத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ ஆகிய மூவருமே தலா 14 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மோமினுல் ஹக் 6  ரன்னில் ஆட்டமிழக்க, 49 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது வங்கதேச அணி.

படுமோசமான நிலையிலிருந்த வங்கதேச அணியை லிட்டன் தாஸ் மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் இணைந்து மீட்டெடுத்தனர். அபாரமாக பேட்டிங் ஆடிய லிட்டன் தாஸ் சதமடிக்க, அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹீமும் சதத்தை நெருங்கிவிட்டார்.

பாகிஸ்தான் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவரும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறிவருகின்றனர். முதல் நாள் ஆட்டமுடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் அடித்துள்ளது. லிட்டன் தாஸ் 113 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரஹீம் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து