ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து ஆஸ்திரேலியாவின் மானம் காத்த லபுஷேன்

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 5:51 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், மார்னஸ் லபுஷேனின் பொறுப்பான சதத்தால் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை அடித்தது ஆஸ்திரேலிய அணி. 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் லபுஷேனை தவிர வேறு யாருமே பொறுப்பான இன்னிங்ஸ் ஆடவில்லை. 

தொடக்க வீரர் வார்னர் வெறும் 4 ரன்னில் நோர்ட்ஜேவின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்மித்துடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக, அவசரப்படாமல் மிகவும் நிதானமாக ஆடிய ஃபின்ச், தனது வழக்கமான இன்னிங்ஸுக்கு மாறாக மிகவும் மெதுவாக ஆடினார். ஆனால் அவர் களத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 48 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பு லபுஷேனின் மீது இறங்கியது. 

லபுஷேன் ஒருமுனையில் சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஷார்ட்டும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்தனர். ஷார்ட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் சிறப்பாக ஆடினார். 32 ரன்களுக்கு மார்ஷும் ஆட்டமிழந்தார். கேரியும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மறுமுனையில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜெய் ரிச்சர்ட்ஸன் தன் பங்கிற்கு 24 ரன்கள் அடித்தார்.

Also Read - இது இரண்டுல எது ரொம்ப சவாலான முடிவு..? கஷ்டமான கேள்விக்கு சட்டென வந்த பதில்

இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 254 ரன்கள் அடித்துள்ளது. 108 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 108 ரன்களை குவித்த லபுஷேன், கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். லபுஷேனின் பொறுப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடித்தது. 
 

click me!