இது இரண்டுல எது ரொம்ப சவாலான முடிவு..? கஷ்டமான கேள்விக்கு சட்டென வந்த பதில்

By karthikeyan VFirst Published Mar 7, 2020, 5:12 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தனது பதவிக்காலத்தில் எடுத்த மிகவும் கஷ்டமான முடிவு என்னவென்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு முறையே சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்தநிலையில், தனது பதவிக்காலத்தில் நடந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து ஒரு இண்டர்வியூவில் பேசியுள்ளார். 

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலத்தில் இந்திய அணி அனைத்து ஃபார்மட்டுகளிலும் அபாரமாக ஆடி சிறந்து விளங்கினாலும், மோசமான சில தேர்வுகளால் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார் எம்.எஸ்.கே.பிரசாத். 

தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், கிரிக்பஸ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தனது பதவிக்காலத்தில் எடுத்த முடிவுகளில், தோனியின் இடத்தை பூர்த்தி செய்தது அல்லது அஷ்வின் - ஜடேஜாவை ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டியது ஆகிய இரண்டில் எது சவாலான முடிவு என்ற கேள்விக்கு பிரசாத் பதிலளித்துள்ளார். 

”அஷ்வின் மற்றும் ஜடேஜாவை வெள்ளை பந்து போட்டிகளில் இருந்து நீக்கியது மற்றும் தோனிக்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பும் வீரரை தேர்வு செய்தது என இது இரண்டுமே சவாலான முடிவுகள் தான்” என்று பிரசாத் தெரிவித்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

அஷ்வின் - ஜடேஜாவை 2017ல் பிற்பாதியில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து நீக்கிவிட்டு சாஹல் மற்றும் குல்தீப் யாதவை அணியில் எடுத்தனர். அதேபோல தோனி என்ற மாபெரும் வீரருக்கு பிறகு, அவரது இடத்தை நிரப்பும் வீரராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். இவை இரண்டையும் பற்றித்தான் பிரசாத் பேசியிருக்கிறார்.

click me!