#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP..! பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP

By karthikeyan VFirst Published Jan 21, 2021, 12:06 AM IST
Highlights

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டான் கோட்ரெல் ஆகிய பெரிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுவருகின்றனர். அந்தவகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சில பெரிய தலைகள் என்று கருதப்படுபவர்களை கழட்டிவிட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் நீண்ட காலமாக ஆடிவருபவர் க்ளென் மேக்ஸ்வெல். இடையில் டெல்லி அணியில் ஆடினாலும், அவரை மீண்டும் பத்தே முக்கால் கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. அவர் மீது நம்பிக்கை வைத்து கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பளித்தது. கடந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே அவர் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியபோதும், அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்தது பஞ்சாப் அணி. ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ளாமல், 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் ஐபிஎல்லுக்கு முன் ஆஸி., அணிக்காக ஆடியபோது அபாரமாக ஆடியிருந்த மேக்ஸ்வெல், ஐபிஎல்லுக்கு பின் இந்தியாவுக்கு எதிராக ஆஸி.,க்காக ஆடியபோதும் மிகச்சிறப்பாக ஆடினார். ஆனால் ஐபிஎல்லில் மட்டும் தொடர்ச்சியாக சொதப்பியே வந்த நிலையில், அவர் மீது இனியும் நம்பிக்கை வைப்பது வீண் என்பதை உணர்ந்து அவரை அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ளது பஞ்சாப் அணி.

அதேபோல எட்டரை கோடிக்கு எடுக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டான் கோட்ரெலையும் கழட்டிவிட்டுள்ளது பஞ்சாப் அணி. நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், ஆஃப்கான் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான், கிருஷ்ணப்பா கௌதம், கருண் நாயர் ஆகியோரையும் பஞ்சாப் அணி கழட்டிவிட்டுள்ளது.

பஞ்சாப் அணி கழட்டிவிட்ட வீரர்கள்:

க்ளென் மேக்ஸ்வெல், ஷெல்டான் கோட்ரெல், ஜிம்மி நீஷம், முஜீபுர் ரஹ்மான், ஹார்டஸ் வில்ஜோயன், கிருஷ்ணப்பா கௌதம், கருண் நாயர், ஜே சுச்சித், டஜிந்தர் சிங்.

பஞ்சாப் அணி தக்கவைத்த வீரர்கள்:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், முகமது ஷமி, முருகன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், சர்ஃபராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய், கிறிஸ் ஜோர்டான், இஷான் போரெல், ஹர்ப்ரீத் ப்ரார், தர்ஷன் நால்கண்டே.
 

click me!