முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை அசால்ட்டா வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 20, 2021, 6:03 PM IST
Highlights

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் தமீம் இக்பால், வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

புது வீரர்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் ஆடி, 33வது ஓவரிலேயே வெறும் 122 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர் மேயர்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். ரோவ்மன் பவல் 28 ரன்கள் அடித்தார். அவர்களை தவிர மற்ற அனைவருமே மிகச்சொற்பமான ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 122 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. வங்கதேச அணி சார்பில், அந்த அணியின் சீனியர் வீரரும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

123 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான தமீம் இக்பால் 44 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் 14 ரன்களுக்கும், ஷகிப் அல் ஹசன் 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, முஷ்ஃபிகுர் ரஹீமும்(19), மஹ்மதுல்லாவும்(9) இணைந்து போட்டியை முடித்தனர். ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

click me!