டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 272 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 2ஆவது அணியாகவும், டி20 கிரிக்கெட்டில் 5ஆவது அணியாகவும் அதிக ரன்களை குவித்து கேகேஆர் சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 16ஆவது லீக் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து பல சாதனைகளை படைத்தது.
பிலிப் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி டி20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் அங்க்ரிஷ் அகுவன்ஷி தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்னிலும், ரிங்கு சிங் 26 ரன்னிலும் நடையை கட்டினர். கடைசியில் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது.
இதன் மூலமாக இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2ஆவது அணி என்ற சாதனயை கேகேஆர் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 277/3 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 5ஆவது அணி என்ற சாதனையை கேகேஆர் படைத்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:
314/3 - நேபாள் vs மங்கோலியா, ஹாங்ஷோ, 2023
278/3 – ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து, டேராடூன், 2019
278/4 – செக் குடியரசு vs துருக்கி, இல்ஃபோவ், 2019
277/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், 2024
271 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம், இன்றைய 16ஆவது லீக் போட்டி*
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:
277/3 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், 2024
272/7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம், இன்றைய 16ஆவது லீக் போட்டி*
263/5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs புனே வாரியர்ஸ், பெங்களூரு, 2013
257/5 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மொகாலி, 2023
248/3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் லயன்ஸ், பெங்களூரு, 2016