கேகேஆர் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டுமே நல்ல வலுவான நிலையில் உள்ளன. எஞ்சிய 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுக்குமே பிளே ஆஃபிற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தலா 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 மற்றும் 6ம் இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் இன்று மோதுகின்றன. வாழ்வா சாவா போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்த சீசனை மிக அருமையாக தொடங்கி அதன்பின்னர் தொடர் தோல்விகளை ராஜஸ்தான் அணி தழுவினாலும், அந்த அணி ஆடிவரும் காம்பினேஷன் தான் சிறந்த மற்றும் வலுவான காம்பினேஷன் என்பதால் மாற்றம் செய்யப்படாது. இரு அணிகளுமே அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் பிளேயர் - சுயாஷ் ஷர்மா
ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
இம்பேக்ட் பிளேயர் - ரியான் பராக்