RR vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தாறுமாறு மாற்றங்கள்! கேகேஆர் அணியில் ஒரு மாற்றம்

Published : Apr 18, 2022, 07:29 PM IST
RR vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தாறுமாறு மாற்றங்கள்! கேகேஆர் அணியில் ஒரு மாற்றம்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் அமான் கான் நீக்கப்பட்டு மீண்டும் ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷெல்டான் கோட்ரெல் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராசி வாண்டர் டசன், குல்தீப் சென் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு, கருண் நாயர், ஒபெட் மெக்காய் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!