IPL 2021 டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மோர்கனின் அதிரடி முடிவு..! இந்த மேட்ச்சிலும் மும்பை அணியில் அவர் ஆடல

Published : Sep 23, 2021, 07:23 PM IST
IPL 2021 டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மோர்கனின் அதிரடி முடிவு..! இந்த மேட்ச்சிலும் மும்பை அணியில் அவர் ஆடல

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

பேட்டிங்கில் இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்தாலும், பவுலிங்கில் டிரெண்ட் போல்ட், பும்ரா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர் ஆகிய பவுலர்களை பெற்றிருப்பதால், கேகேஆரை விட மும்பை அணி பவுலிங்கில் கேகேஆர் அணியை விட வலுவான அணியாக திகழ்கிறது.

ஆர்சிபிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ஆடுவதால் அன்மோல்ப்ரீத் சிங் நீக்கப்பட்டுள்ளார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் ஆடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?