IPL 2021 #MIvsKKR ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இரு அணிகளின் ஆடும் லெவன்..! மும்பை அணியில் 2 மாற்றங்கள்

Published : Sep 23, 2021, 05:08 PM IST
IPL 2021 #MIvsKKR ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இரு அணிகளின் ஆடும் லெவன்..! மும்பை அணியில் 2 மாற்றங்கள்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் மோதும் நிலையில், இந்த அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட தேவையும் இல்லை, வாய்ப்பும் இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார். அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் கேகேஆர் அணி களமிறங்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிராத ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்த போட்டியில் ஆடுவார்கள் என்பதால், அவர்களுக்கு பதிலாக ஆடிய அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் சவுரப் திவாரி ஆகிய இருவரும் நீக்கப்படுவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?