IPL 2021 ஐபிஎல் 14வது சீசனின் டாப் 10 அதிவேக பந்தில் 8 பந்தை ஒரே போட்டியில் வீசித்தள்ளிய அன்ரிச் நோர்க்யா

By karthikeyan VFirst Published Sep 23, 2021, 4:29 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் டாப் 10 அதிவேக பந்துகளில் 8 பந்துகளை ஒரே போட்டியில் வீசி மிரட்டியுள்ளார் அன்ரிச் நோர்க்யா.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாயில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி அணியின் ஃபாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்க்யாவின் அதிவேக மிரட்டல் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறியது சன்ரைசர்ஸ் அணி. 

நோர்க்யாவின் மிரட்டலான வேகத்தால் ஆரம்பத்திலேயே ரன் வேகமெடுக்க விடாமல் பார்த்துக்கொண்ட டெல்லி அணி, கடைசி வரை ரன் வேகத்தை கட்டுக்குள்ளேயேவைத்து, அந்த அணியை 134 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. 

135 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி எளிதாக அதை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டெல்லி அணியின் ஃபாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்க்யா தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாகத்தில் ஆடிராத, அமீரகத்தில் நடந்துவரும் 2வது பாகத்தில் ஆடுகிறார். இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியதுதான் அவரது முதல் போட்டி. இந்த போட்டியின் முதல் ஓவரையே அதிவேகமாக வீசி மிரட்டினார். முதல் ஓவரில் அன்ரிச் நோர்க்யா வீசிய பந்துகளின் வேகம் முறையே மணிக்கு, 148.2கிமீ, 145கிமீ, 147.5கிமீ, 150.8கிமீ, 151.2கிமீ, 147.1கிமீ.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் நோர்க்யா. நோர்க்யாவின் இந்தளவிற்கு ரன்னை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தியதற்கு காரணம், அவரது அதிவேகம். இந்த போட்டியில் 4 பந்துகளை மணிக்கு 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசினார் நோர்க்யா.

அதன்மூலம், இந்த சீசனில் டாப் 10 அதிவேக பந்துகளில் 8 பந்துகள் நோர்க்யா வீசியவை. 9வது பந்து ரபாடா, 10வது பந்து கிறிஸ் ஜோர்டான்.

ஐபிஎல் 14வது சீசனின் டாப் 10 அதிவேக பந்துகள்:

1.    அன்ரிச் நோர்க்யா    151.71
2.    அன்ரிச் நோர்க்யா    151.37
3.    அன்ரிச் நோர்க்யா    150.83
4.    அன்ரிச் நோர்க்யா    150.21
5.    அன்ரிச் நோர்க்யா    149.97
6.    அன்ரிச் நோர்க்யா    149.29
7.    அன்ரிச் நோர்க்யா    149.15
8.    அன்ரிச் நோர்க்யா    148.76
9.    ககிசோ ரபாடா          148.73
10.    கிறிஸ் ஜோர்டான்    148.47
 

click me!