#IPL2021 ஏகப்பட்ட சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பொல்லார்டு

By karthikeyan VFirst Published Apr 9, 2021, 4:08 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்டு பல மைல்கற்களை எட்ட காத்திருக்கிறார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஆடுகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் இன்னும் 2 சிக்ஸர்களை அடித்தால் ஐபிஎல்லில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ள பொல்லார்டு, இந்த சீசனில் படைக்கப்போகும் பல சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.

1. 164 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 198 சிக்ஸர்களை விளாசியுள்ள பொல்லார்டு, இன்னும் 2 சிக்ஸர் அடித்தால், ஐபிஎல்லில் 200 சிக்ஸர்கள் அடித்த 6வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன், கிறிஸ் கெய்ல்(349), டிவில்லியர்ஸ்(235), தோனி(216), ரோஹித் சர்மா(213), விராட் கோலி(201) ஆகிய 5 வீரர்கள் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.

2. பொல்லார்டு இன்னும் 7 விக்கெட் வீழ்த்தினால், டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 5000 ரன்கள், பவுலிங்கில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 4வது ஆல்ரவுண்டர் என்ற பெருமையை பெறுவார். டி20 கிரிக்கெட்டில் ட்வைன் பிராவோ, ஷகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரசல் ஆகிய மூவரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

3. பொல்லார்டு இன்னும் 10 கேட்ச்கள் பிடித்தால் ஐபிஎல்லில் 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

4. பொல்லார்டு இன்னும் 25 பவுண்டரிகள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் 700 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
 

click me!