ஐபிஎல் 2020: இந்த சீசனில் அந்த அணிதான் டைட்டிலை வெல்லும்.. கெவின் பீட்டர்சன் ஆருடம்

By karthikeyan VFirst Published Sep 12, 2020, 9:48 PM IST
Highlights

ஐபிஎல் 2020 டைட்டிலை டெல்லி கேபிடள்ஸ் அணி தான் வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து முன்னாள் கேப்டனுமான கெவின் பீட்டர்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 13வது சீசன் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

இவற்றில் இளமையும் அனுபவமும் கலந்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு, ரிக்கி பாண்டிங் என்ற மிகப்பெரும் ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறப்பாக வழிநடத்திவருகிறார். டெல்லி கேபிடள்ஸ் அணி, 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சீசனில் தான் பிளே ஆஃபிற்கு சென்றது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி என துடிப்பான இளம் வீரர்களும், ரஹானே, தவான், அஷ்வின் என அனுபவம் வாய்ந்த வீரர்களும் என துடிப்பான இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக அந்த அணி உள்ளது. 

இந்த சீசனிலாவது டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும் என்று முன்னாள் ஜாம்பவனான கெவின் பீட்டர்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிஷன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரஹானே, அஷ்வின், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.
 

click me!