இங்க யாருமே பெரியவன் கிடையாது.. யாரு வேணா யார வேணா வீழ்த்தலாம்!! நியூசி., கேப்டன் வில்லியம்சன் அதிரடி.. யாரை சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Feb 27, 2019, 2:34 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் மிகச்சிறந்த கேப்டனாகவும் திகழ்பவர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் மிகச்சிறந்த கேப்டனாகவும் திகழ்பவர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். 

வில்லியம்சன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய அணிகளுக்கு பிறகு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் வலுவான அணியாக திகழ்கிறது. 

இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை நியூசிலாந்து இழந்திருந்தாலும், வங்கதேசத்திற்கு எதிராக அபாரமாக ஆடி அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றுள்ளது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில், ரோஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், நிகோல்ஸ், நீஷம் ஆகியோர் செம ஃபார்மில் உள்ளனர். அதனால் உலக கோப்பையில் நியூசிலாந்து அணி வலுவான போட்டியாளராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன், ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் பேசும்போது கூட, வெறுமனே கடமைக்காக ஏதாவது ஒரு கருத்தை கூறமாட்டார். அந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் செயல்பாடு மற்றும் எதிரணியின் செயல்பாடு ஆகிய இரண்டை பற்றியும் தெளிவான கருத்தை முன்வைப்பார். எதிரணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருந்தால் வெகுவாக பாராட்டுவார். எதையும் வெளிப்படையாக பேசும் மற்றும் எதிரணியை குறைத்து மதிப்பிடாத கேப்டன் வில்லியம்சன். 

நியூசிலாந்திடம் மரண அடி வாங்கிய இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவில் வைத்து அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இலங்கையிடம் தோற்றதால் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தரவரிசையில் கீழிறங்கியது. அதனால் நியூசிலாந்து அணி முன்னேறியது. தங்களிடம் அடி வாங்கிய இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவில் அந்த அணியை வீழ்த்தியது குறித்து கருத்து தெரிவித்த கேன் வில்லியம்சன், இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது சிறப்பான சம்பவம். தென்னாப்பிரிக்கா போன்ற அணியை வெளிநாட்டில் வைத்து வீழ்த்துவதே கடினம். அப்படியிருக்கையில், அவர்களின் சொந்த மண்ணிலேயே இலங்கை அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. எந்த அணியும் எந்த அணியை வேண்டுமானால் வீழ்த்த முடியும் என்று அதிரடியாக தெரிவித்தார். 

click me!