உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published May 8, 2019, 4:44 PM IST
Highlights

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியனும் 5 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலிய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

உலக கோப்பை இந்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியனும் 5 முறை சாம்பியனுமான ஆஸ்திரேலிய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஸ்மித்தும் வார்னரும் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். 

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸன், தோள்பட்டை காயத்திலிருந்து மீளாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் அபாரமாக வீசினார் ஜெய் ரிச்சர்ட்ஸன். அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தோள்பட்டை காயம் ஏற்பட்டது. 

ஆனாலும் அந்த காயம் குணமடைந்துவிடும் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஜெய் ரிச்சர்ட்ஸன் நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்ஸன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேன் ரிச்சர்ட்ஸன், அண்மையில் நடந்து முடிந்த பிக்பேஷ் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் குல்ட்டர்நைல், ஆடம் ஸாம்பா, நாதன் லயன். 
 

click me!