Australia vs England: கடைசி ஆஷஸ் டெஸ்ட்டில் ஆடாமல் நாடு திரும்பும் ஜோஸ் பட்லர்..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Jan 9, 2022, 6:09 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் நாடு திரும்புவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. ஆஷஸ் தொடரை இரு அணிகளுமே உலக கோப்பை போல நினைத்து வெறித்தனமாக வெற்றிக்காக போராடும். இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுவதால், இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படியிருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமாக ஆடிவருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி, சிட்னியில் நடந்த 4வது டெஸ்ட்டில் போராடி போட்டியை டிரா செய்தது.

இங்கிலாந்து அணி இப்போது ஆடுவதை பார்க்கையில், கடைசி டெஸ்ட்டில் ஜெயிக்க வாய்ப்பேயில்லை. அபாரமாக ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி கடைசி டெஸ்ட்டிலும் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த தொடரில் படுமோசமாக சொதப்பிவரும் நிலையில், கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரருமான ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஹோபர்ட்டில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் நாடு திரும்புகிறார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். ஏற்கனவே படுமோசமாக ஆடிவரும் இங்கிலாந்து அணிக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 
 

click me!