ICC WTC புள்ளி பட்டியல்.. சிட்னி டெஸ்ட் டிரா-வால் சிறு சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா..! முதலிடத்தில் இலங்கை

Published : Jan 09, 2022, 05:28 PM IST
ICC WTC புள்ளி பட்டியல்.. சிட்னி டெஸ்ட் டிரா-வால் சிறு சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா..! முதலிடத்தில் இலங்கை

சுருக்கம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் டிராவில் முடிந்ததையடுத்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021ல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 100 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருந்தது. இலங்கை அணி 2ம் இடத்தில் இருந்தது. 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 4வது போட்டி சிட்னியில் நடந்தது. ஜனவரி 5ம் தேதி தொடங்கி நடந்த போட்டி இன்றுதான் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. எனவே 100 சதவிகிதத்திலிருந்து வெற்றி விகிதம் 83.33 சதவிகிதமாக குறைந்தது. அதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. முதலிடத்தில் 100 சதவிகிதத்துடன் இலங்கை அணி உள்ளது.

75 சதவிகித வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 3ம் இடத்தில் உள்ளது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் வெற்றி விகிதம் சற்று சரிந்துள்ளது. 55.21 சதவிகிதத்துடன் இந்திய அணி 4ம் இடத்தில் உள்ளது.

இந்த புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதும்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!