ஸ்மித்திற்கு ஆர்ச்சர் நெருக்கடி கொடுப்பார் என இங்கிலாந்து அணி நம்பிய நிலையில், அந்த வியூகம் பலனளிக்கவில்லை. ஸ்மித் ரன்னை குவிப்பதை இங்கிலாந்து அணியால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவரை வீழ்த்தவும் முடியவில்லை.
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வழக்கம்போலவே ஸ்மித் மட்டுமே சிறப்பாக ஆடினார். லபுஷேன் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.
ஸ்மித் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரை தவிர லபுஷேன் மட்டுமே ஓரளவிற்கு ஆடினார்; மற்ற யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 225 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தூணாக திகழ்ந்துவரும் ஸ்மித்தை வீழ்த்துவதே இங்கிலாந்து அணியால் முடியாத காரியமாகிவிட்டது. ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடி, ரன்களை குவித்துவருவதோடு, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்துவருகிறார். ஆஸ்திரேலிய அணி வென்ற இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றது ஸ்மித் தான்.
ஸ்மித்திற்கு ஆர்ச்சர் நெருக்கடி கொடுப்பார் என இங்கிலாந்து அணி நம்பிய நிலையில், அந்த வியூகம் பலனளிக்கவில்லை. ஸ்மித் ரன்னை குவிப்பதை இங்கிலாந்து அணியால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவரை வீழ்த்தவும் முடியவில்லை. அவரது கவனக்குவிப்பு அபாரமாக உள்ளது.
எனவே ஸ்மித்தின் கவனக்குவிப்பை சிதறடிக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஒரு செயலை செய்தார். ஸ்மித் 26 ரன்களுடன் முதல் இன்னிங்ஸில் ஆடிக்கொண்டிருந்தபோது, பேர்ஸ்டோ ஒரு செயலை செய்தார். ஆர்ச்சர் வீசிய பந்தை அடித்துவிட்டு ஸ்மித்தும் வேடும் இரண்டு ரன்கள் ஓடினர்.
ஸ்மித் ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி இரண்டாவது ரன்னை ஓடிக்கொண்டிருந்தபோது, பந்து தன்னிடம் நெருங்கிவிட்டதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ஸ்மித்திற்கு பதற்றத்தை அளித்தார் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ. ஆனால் உண்மையில், பந்து அவரிடம் வரவில்லை. தாமதமாகவே அந்த த்ரோ விடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த த்ரோவை பவுலர் ஆர்ச்சரே பிடித்துவிட்டார். ஆனால் பேர்ஸ்டோ பந்தை பிடித்து ஸ்டம்பை அடிப்பதற்கு தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியதால், ஸ்மித் பயந்துபோய் தனது விக்கெட்டை காப்பாற்றுவதற்காக தாவிக்குதித்து கீழே விழுந்தார். பின்னர்தான் பேர்ஸ்டோவிடம் பந்து வரவேயில்லை என்பதை உணர்ந்தார். அந்த வீடியோ இதோ...
Cheeky from Jonny Bairstow 😉pic.twitter.com/icYpYzJ2Yt
— Wisden (@WisdenCricket)Jonny Bairstow, top notch shithousery pic.twitter.com/hwp4j176Gf
— Ollie Green (@OllieGreen_)பேர்ஸ்டோ செய்தது ஏமாற்று வேலை இல்லையா என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டை டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். ஐசிசி விதிப்படி, களத்தில் மற்ற வீரர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.