வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து அணியிலிருந்து ஆர்ச்சர் திடீர் நீக்கம்..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Jul 16, 2020, 2:19 PM IST
Highlights

வெஸ்ட்  இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், 4 மாதங்களுக்கு பிறகு, மிகக்கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 

சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் மீறியதால், அவர் இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தனது தவறை ஒப்புக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், தன்னை மட்டுமல்லாது தனது அணியையும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது தவறுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியில் ரூட்டும் ஸ்டூவர்ட் பிராடும் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருந்தது. இந்த போட்டியில் அவர்கள் இருவரும் அணிக்கு திரும்பும் நிலையில், முழு பலத்துடன் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் களமிறங்க இருந்தது. ஆனால் அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு வருத்தமானது தான். ஆனாலும் ஆண்டர்சன், பிராட், மார்க் உட் ஆகிய மூவரும் உள்ளனர் என்பதால் பிரச்னையில்லை. ஆர்ச்சரின் நீக்கம், மார்க் உட்டிற்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. ஏனெனில், பிராட் அணிக்குள் நுழைவதால் இந்த போட்டியில் மார்க் உட் நீக்கப்பட்டிருப்பார். ஆனால் ஆர்ச்சர் கொரோனா விதிமுறைகளை மீறியதால் நீக்கப்பட்டதால், மார்க் உட்டை நீக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
 

click me!