நூற்றாண்டு கால மோசமான சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த ஜோ ரூட்..!

By karthikeyan VFirst Published Jul 25, 2020, 10:39 PM IST
Highlights

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நூற்றாண்டு கால மோசமான சாதனையை முறியடித்துள்ளார். 
 

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நூற்றாண்டு கால மோசமான சாதனையை முறியடித்துள்ளார். 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 110 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறிவருகின்றனர். 

முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 17 ரன்களில் அவுட்டானார். கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜோ ரூட் ரன் அவுட் தான் ஆனார். எனவே இதுவரை மொத்தம் 6 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட்டாகியுள்ளார் ஜோ ரூட். 

இங்கிலாந்து அணியின் கேப்டனாக 4 முறை அவுட்டாகியுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக மொத்தம் 6 முறை அவுட்டாகியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான முறை ரன் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் ஜோ ரூட். தலா 7 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட்டாகியுள்ள ஜெஃப்ரி பாய்காட் மற்றும் மாட் பிரையர் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். 6 முறை ரன் அவுட்டான ரூட், இரண்டாமிடத்தில் உள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை ரன் அவுட்டான கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரூட் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆர்ச்சி மெக்ளாரன், கேப்டனாக காலக்கட்டத்தில் 3 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட்டாகியுள்ளார். 1902ம் ஆண்டுக்கு பிறகு எந்த இங்கிலாந்து கேப்டனும் அவரை விட அதிகமாக ரன் அவுட்டாகவில்லை. இந்நிலையில், 118 ஆண்டுகளுக்கு பிறகு 2020ல் அந்த மோசமான சாதனையை முறியடித்துள்ளார் ஜோ ரூட். ரூட் கேப்டனாக மட்டுமே 4 முறை ரன் அவுட்டாகியிருக்கிறார். 

ஏற்கனவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் ஜோ ரூட், மோசமான சாதனையையும் செய்திருக்கிறார். அவரது கெரியரில் மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறார் ரூட்.
 

click me!