IND vs AUS: நீ எப்படியும் ஆடப்போறது இல்ல.. கிளம்பு..! இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்

By karthikeyan V  |  First Published Feb 13, 2023, 2:39 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் ஜெய்தேவ் உனாத்கத்.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

2வது டெஸ்ட் போட்டி டெல்லியிலும், 4வது டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கின்றன. தர்மசாலாவில் நடக்கவிருந்த 3வது டெஸ்ட் போட்டி, அந்த மைதானம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 3வது டெஸ்ட் தர்மசாலாவிலிருந்து இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் விடுவிக்கப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான உனாத்கத் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2022ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடினார். தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கெரியரில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் உனாத்கத்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்தேவ் உனாத்கத் இடம்பெற்றிருந்தார். ஆனால் முதல் டெஸ்ட்டில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் மட்டுமே ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடினார்கள்.

டெல்லியில் நடக்கும் 2வது டெஸ்ட்டிலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், அவர் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி ஃபைனலுக்கு நடப்பு சாம்பியனான சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் முன்னேறியுள்ளன.

அரையிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி சௌராஷ்டிராவும், மத்திய பிரதேசம் அணியை வீழ்த்தி பெங்கால் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின. கடந்த ரஞ்சி டிராபி தொடரில் ஜெய்தேவ் உனாத்கத் தலைமையில் சௌராஷ்டிரா அணி தான் கோப்பையை வென்றது. இந்த முறையும் ஃபைனலுக்கு முன்னேறியிருப்பதால், ரஞ்சி டிராபியில் சௌராஷ்டிரா அணியில் ஆடுவதற்காக, ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் உனாத்கத். அவர் இந்திய அணியில் இருந்தாலும், எப்படியும் 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் இடம் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கும். அதனால் உனாத்கத்திற்கு இடம் கிடைக்காது. எனவே அவர் ரஞ்சி டிராபி ஃபைனலிலாவது ஆடட்டும் என்பதற்காக இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

ரஞ்சி டிராபி ஃபைனல் வரும் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்குகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இந்தூரில் மார்ச் 1ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உனாத்கத் இணைந்துவிடுவார் என்று தெரிகிறது.
 

click me!