நியூசிலாந்தின் கிரெக் பார்க்லேயின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2027 வரை மூன்று ஆண்டுகள் இவர் பதவி வகிப்பார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஐசிசியின் தலைவராக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேயின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக அவர் நான் போட்டியிட மாட்டேன் கூறியுள்ளார். இதையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதோடு விருப்பம் உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 27 ஆம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பிசிசிஐயின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது வெளியான அறிவிப்பின்படி ஜெய் ஷா போட்டியின்றி ஐசிசியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
IND vs BAN Test: வங்கதேச புலிகளை எதிர்கொள்ளும் சக்தி அஸ்வின் – ஜடேஜாவிற்கு உண்டு!
இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதால், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2027 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் ஜெய் ஷா ஐசிசியின் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் ஐசிசியின் தலைவரான பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவராக இருந்துள்ளனர்.