ஒரே போட்டி, ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பிளேஸ்: புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!

Published : Feb 07, 2024, 06:37 PM ISTUpdated : Feb 07, 2024, 06:38 PM IST
ஒரே போட்டி, ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பிளேஸ்: புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!

சுருக்கம்

டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என்று அனைத்து வடிவங்களுக்குமான ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கடுமையாக போராடி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்திருக்கிறது. இதையடுத்து 3ஆவது போட்டி வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Rishabh Pant: டேவிட் வார்னர் தான் கேப்டன் – உண்மையை உடைத்த டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் கைப்பற்றி 9 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் தான் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 881 புள்ளிகளுடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி WTC புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து!

இதற்கு முன்னதாக நம்பர் 1 இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் சரிந்து 841 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என்று அனைத்து வடிவங்களிலும் பவுலிங் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடமும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 இடமும் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni Temple Video: ராஞ்சியில் தியோரி மா கோவிலில் சாமி தரிசனம் செய்த தோனி – வைரலாகும் வீடியோ!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?