ஐபிஎல் வரலாற்றில் 3வது ஸ்பின்னர்.. தனித்துவ சாதனையை தன்வசமாக்கிய ஜெகதீஷா சுஜித்

Published : May 08, 2022, 10:00 PM IST
ஐபிஎல் வரலாற்றில் 3வது ஸ்பின்னர்.. தனித்துவ சாதனையை தன்வசமாக்கிய ஜெகதீஷா சுஜித்

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஸ்பின்னர் ஜெகதீஷா சுஜித் தனித்துவ சாதனையை படைத்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த சீசனில் ஏற்கனவே 2 முறை கோல்டன் டக் அவுட்டாகியுள்ள, மோசமான ஃபார்மில் உள்ள கோலி, இந்த போட்டியிலும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஸ்பின்னர் ஜெகதீஷா சுஜித்தின் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஜெகதீஷா சுஜித் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஐபிஎல்லில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய 3வது ஸ்பின்னர் என்ற சாதனையை சுஜித் படைத்துள்ளார். இதற்கு முன் 2009 ஐபிஎல்லில் கெவின் பீட்டர்சனும், 2012 ஐபிஎல்லில் மார்லான் சாமுவேல்ஸும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய  2 ஸ்பின்னர்கள் ஆவர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!