நியூசிலாந்துக்கு மரண பயத்தை காட்டும் ஜடேஜா.. தனி ஒருவனாக அரைசதம் அடித்து போராடும் ஜடேஜா

Published : Jul 10, 2019, 06:45 PM IST
நியூசிலாந்துக்கு மரண பயத்தை காட்டும் ஜடேஜா.. தனி ஒருவனாக அரைசதம் அடித்து போராடும் ஜடேஜா

சுருக்கம்

உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி நியூசிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.   

உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி நியூசிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். 

மான்செஸ்டரில் நடந்துவரும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. ரிஷப்பும் பாண்டியாவும் ஓரளவுக்கு நம்பிக்கையளித்து வருகின்றனர். முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் அடித்தது. 

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித்தும் கோலியும் தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். கோலி அவுட்டான அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப்பும் பாண்டியாவும் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடிவந்த ரிஷப் பண்ட், அவசரப்பட்டு பெரிய ஷாட் ஆடி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் விக்கெட்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவும் அவசரப்பட்டு தூக்கியடித்து 32 ரன்களில் வெளியேறினார். ஸ்பின் பவுலிங்கை பார்த்தால் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தை அடக்கமுடியாத ஹர்திக் பாண்டியா, சாண்ட்னெரின் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஷாட் சரியாக கனெக்ட் ஆகாததால் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, மிகுந்த நம்பிக்கையுடன் சற்றும் பயமோ பதற்றமோ இல்லாமல் அடித்து ஆடிவருகிறார். ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என்ற பாகுபாடே பார்க்காமல் அடித்து ஆடினார். நீஷம், சாண்ட்னெரின் பவுலிங்கில் சிக்ஸர்களை விளாசினார். 3 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

42 ஓவர் முடிவில் 168 ரன்கள் அடித்துள்ளது இந்திய அணி. கடைசி 8 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 72 ரன்கள் தேவை. ஜடேஜா இதேபோன்று தெளிவாகவும் அதேநேரத்தில் ஆக்ரோஷமாகவும் ஆடினால் வெற்றி சாத்தியம்.
 

PREV
click me!

Recommended Stories

MS Dhoni Records: சென்னையின் ஆல்டைம் ஃபேவரைட்.. யாராலும் முறியடிக்க முடியாத தோனியின் IPL சாதனைகள்!
vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!