ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சிறப்பாக ஆடிவருகிறது. இந்த சீசனில் அந்த அணி நன்றாக ஆடிவந்த நிலையில், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்த கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல்லில் இருந்து விலகினார். ஐபிஎல்லில் இருந்து மட்டுமல்லாது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்தும் ராகுல் விலகினார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதிபெற்றன. வரும் ஜூன் 7ம் தேதி முதல் லண்டன் ஓவலில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது. இந்த ஃபைனலுக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் புதிய சாதனை..! இனிமேல் யாரும் முறியடிப்பது கடினம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேஎல் ராகுல் காயம் காரணமாக அந்த போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் இருக்கிறார். அவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆடுவார் என்றாலும், அவருக்கு இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் குறைவு. ஆனால் கேஎல் ராகுல் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.
மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் ஏற்கனவே சதமும் அடித்திருக்கிறார். எனவே இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் ராகுல் தான் முதன்மை ஓபனிங் ஆப்சனாக இருந்தார். அனுபவ வீரரான அவர் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு. இந்நிலையில், இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
14 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இஷான் கிஷன், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியதில்லை. அவர் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார்.