IPL 2022: SRH அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கும்..! வார்னர் வாய்ப்பே இல்ல.. இர்ஃபான் பதான் அதிரடி

Published : Nov 27, 2021, 05:55 PM IST
IPL 2022: SRH அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கும்..! வார்னர் வாய்ப்பே இல்ல.. இர்ஃபான் பதான் அதிரடி

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.

இதற்கிடையே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்து கருத்து கூறிவருகின்றனர். 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ஐபிஎல் 14வது சீசனின் மத்தியில் டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து ஓரங்கட்டியது மட்டுமல்லாது, ஆடும் லெவனில் கூட இடம் கொடுக்காமல் ஒதுக்கிவிட்டது சன்ரைசர்ஸ் அணி. அதனால் கடும் அதிருப்தியடைந்த டேவிட் வார்னர், கண்டிப்பாக சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விலகுவது உறுதி. 

அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டேவிட் வார்னரை கண்டிப்பாக சன்ரைசர்ஸ் அணி தக்கவைக்காது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

கேன் வில்லியம்சன் தான் கேப்டன். எனவே கேன் வில்லியம்சனை சன்ரைசர்ஸ் அணி கண்டிப்பாக தக்கவைக்கும் என்றும், ரஷீத் கானையும் தக்கவைக்கும் என்றும் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி.நடராஜன் ஆகியோரை தக்கவைக்க வாய்ப்பில்லை என்றும், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் மற்றும் ஃபினிஷர் ரோலுக்கு அப்துல் சமாத் ஆகிய இருவரையும் சன்ரைசர்ஸ் அணி தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..