ஐபிஎல் எப்போது தொடங்கப்படும்..? வெளியானது தேதி

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 2:09 PM IST
Highlights

ஐபிஎல் எப்போது தொடங்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

ஐபிஎல்லை நடத்துவதில் பிசிசிஐ தீர்மானமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ரசிகர்களும் ஐபிஎல் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

அக்டோபர் 18ல் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் இந்தியாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஐபிஎல் எப்போது நடத்தப்படும் என்ற திடமான முடிவை பிசிசிஐ-யால் எடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், போட்டிகளை காண ரசிகர்களை அனுமதிப்பது, இப்போதைய சூழலில் சாத்தியமல்ல. இந்நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் இந்த ஆண்டே ஐபிஎல்லை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ரசிகர்கள் இல்லாமல் நடத்த நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஐபிஎல் இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்படும் என்று கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், செப்டமர் 26ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி ஐபிஎல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் செப்டம்பர் இறுதியில் தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை நடத்தப்படலாம். சரியாக சொல்ல வேண்டுமென்றால், செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம். டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில் இந்த தேதிகளில் ஐபிஎல் நடத்தப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!