ஐபிஎல் 2020 ஏலம்.. அனைத்து அணிகளின் பவர் குறித்த முக்கியமான தகவலின் முழு விவரம்

By karthikeyan VFirst Published Nov 16, 2019, 3:17 PM IST
Highlights

ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலத்தில் எந்தெந்த அணிகளால் எத்தனை வீரர்கள் வரை ஏலம் எடுக்க முடியும்,. எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை கையிருப்பு இருக்கிறது ஆகிய முழு விவரம். 

ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் அணிகள் சில வீரர்களை பரிமாற்றம் செய்துகொண்டன. வேண்டாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளன. இந்நிலையில், எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை கையிருப்பு இருக்கிறது? இன்னும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்கமுடியும்? ஆகிய விவரங்களை பார்ப்போம். 

1. சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே அணியிடம் ரூ.14.60 கோடி கையிருப்பு உள்ளது. சிஎஸ்கே அணியால் வரும் ஏலத்தில் 5 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும்.

2. டெல்லி கேபிடள்ஸ்

அடுத்த சீசனுக்காக படுதீவிரமாக தயாராகிவருவது டெல்லி கேபிடள்ஸ் அணிதான். ரஹானே, அஷ்வின் என பெரிய வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து வாங்கியுள்ளது. அந்த அணியிடம் ரூ. 27.85 கோடி கையிருப்பு உள்ளது. மேலும் 11 இந்திய வீரர்களையும் 5 வெளிநாட்டு வீரர்களையும் அந்த அணியால் வாங்க முடியும். 

3. கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.42 கோடியே 70 லட்சம் உள்ளது. அந்த அணியால் இன்னும் 9 இந்திய வீரர்கள் மற்றும் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். எனவே மற்ற அணிகள் கழட்டிவிட்டுள்ள, எந்த வீரரையும் வாங்குமளவிற்கு பஞ்சாப் அணியிடம் பணம் இருக்கிறது. 

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேகேஆர் அணியிடம் ரூ.35.65 கோடி இருப்பு உள்ளது. அந்த அணி, 11 இந்திய வீரர்களையும் 4 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும். 

5. மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே பேட்டிங் ஆர்டர் நன்றாகத்தான் உள்ளது. ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள அந்த அணியில், பும்ராவுடன் இணைந்து அடுத்த சீசனில் கலக்கவுள்ளார் டிரெண்ட் போல்ட். எனவே அந்த அணி இனிமேல் பெரிதாக எந்த வீரரையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அணியிடம் ரூ. 13 கோடியே 5 லட்சம் மட்டுமே கையிருப்பு உள்ளது. இன்னும் 7 இந்திய வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் அந்த அணியால் எடுக்க முடியும். 

6. ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணி ரஹானே, கிருஷ்ணப்பா கௌதம், குல்கர்னி ஆகிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. அந்த அணியிடம் ரூ.28 கோடியே 90 லட்சம் உள்ளது. அந்த அணி 11 இந்திய வீரர்களையும் 4 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும். 

7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்சிபி அணி டி கிராண்ட் ஹோம், ஹெட்மயர், டேல் ஸ்டெய்ன், குல்ட்டர்நைல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் சௌதி என வெளிநாட்டு வீரர்களை கொத்தாக கழட்டிவிட்டுள்ளது. அந்த அணியிடம் ரூ. 27 கோடியே 90 லட்சம் கையிருப்பு உள்ளது. அந்த அணி 12 இந்திய வீரர்கள் மற்றும் 6 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். 

8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸிடம் 17 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. அந்த அணியால் 7 இந்திய வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க முடியும். 
 

click me!