அதை மட்டும் நாங்க செஞ்சுட்டோம்னா நாங்கதான் கெத்துனு காலரை தூக்கி விட்டுக்குவோம்.. ஆஸ்திரேலியா ஹெட் கோச்சின் லட்சியம் இதுதானாம்

By karthikeyan VFirst Published Nov 16, 2019, 1:35 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் கடுமையான போட்டியாக பார்க்கப்படும். அதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஆஷஸ் தொடரும் அப்படித்தான். ஆனால் உண்மையாகவே இவற்றையெல்லாம் விட விறுவிறுப்பாக இருப்பதென்றால், அது இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியாகத்தான் இருக்கும். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே எல்லா காலக்கட்டத்திலும் கடுமையாக மோதிக்கொள்ளக்கூடிய அணிகள். இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்றுவிதமான போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக மோதும். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். அதேபோல இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவதும் கடினம். 

பாண்டிங் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்திய அணி அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஃபார்மில் ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 

கடந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியின் அந்த சாதனைப்பயணம் இன்னும் தொடர்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியது முதல் இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை இந்திய மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. 

தற்போது இந்தியாவிற்கு வந்து ஆடிவரும் வங்கதேச அணியையும் இந்திய அணி சம்பவம் செய்துகொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமோ அதேபோலத்தான், இந்திய அணியையும் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். 

இந்திய அணி 2022ம் ஆண்டுதான் இந்தியாவில் வந்து டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் தனது லட்சியம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்திவிட்டால், நாம்(ஆஸ்திரேலியா) தலைசிறந்த அணி என நாமே நினைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அந்தளவிற்கு இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமான காரியம். இந்தியாவிற்கு செல்வதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் அதற்குள்ளாக இந்திய அணியை வீழ்த்த தயாராகிவிடுவோம் என்று லாங்கர் தெரிவித்துள்ளார். 

click me!