ஐபிஎல் 16வது சீசன் ஃபைனல் நடக்கவிருக்கும் அகமதாபாத்தில் மழை விட்டு விட்டு பெய்துவருவதால் ஆட்டம் தொடர்ந்து தாமதமாகிவருகிறது.
ஐபிஎல் 16வது சீசன் இன்றுடன் முடிகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தாமதமான நிலையில், மழை நின்றபின் அம்பயர்கள், போட்டி ரெஃப்ரி மைதானத்தை ஆய்வுசெய்ய தொடங்கினர். 9 மணிக்கு மேல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் மீண்டும் தாமதமானது.
10 மணிக்கு போட்டி தொடங்கினால் 17 ஓவர் போட்டியாக நடத்தப்படும். 10.30 மணிக்கு போட்டிதொடங்கினால் 15 ஓவர் போட்டியாக நடத்தப்படும்.