சச்சினின் பெஸ்ட் இன்னிங்ஸ் அதுதான்; அதுக்கு முன் அவர் அப்படியொரு ருத்ரதாண்டவம் ஆடி நான் பார்க்கல.. இன்சமாம்

By karthikeyan VFirst Published Nov 22, 2020, 6:43 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கரின் பெஸ்ட் இன்னிங்ஸ் எதுவென்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியவர். அதிக ரன்கள், அதிக சதங்கள் உட்பட பல பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் அவரது கெரியரில் பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையில் சச்சின் டெண்டுல்கரின் ஃபேவரைட் இன்னிங்ஸ் என்று ஒருசில இன்னிங்ஸ்கள் கண்டிப்பாக இருக்கும்.

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், அவரது பார்த்தவரையில், சச்சின் டெண்டுல்கரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் ஆடியதுதான்(98 ரன்கள்) என்று தெரிவித்துள்ளார்.

2003ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய லீக் சுற்று போட்டியில் சயீத் அன்வரின் சதத்தால் ஐம்பது ஓவரில் 273 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. 274 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சினும் சேவாக்கும் இணைந்து அதிரடியான நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்த போட்டியில் தொடக்கம் முதலே அடித்து ஆடிய சச்சின் டெண்டுல்கர், 75 பந்தில் 98 ரன்களை குவித்தார். சச்சின் டெண்டுல்கரின் அந்த இன்னிங்ஸ் தான் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இன்சமாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக்,  2003 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் நல்ல ஸ்கோரை அடித்தது. சயீத் அன்வரின் அபாரமான சதத்தால் பாகிஸ்தான் நல்ல ஸ்கோரை அடித்து கடின இலக்கை நிர்ணயித்தது. ஆனால் சச்சின் மற்றும் சேவாக்கின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா வென்றது. சச்சின் டெண்டுல்கர் ஆடிய நிறைய இன்னிங்ஸ்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அவர் ஆடியதைப்போன்ற ஒரு இன்னிங்ஸை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. தென்னாப்பிரிக்க கண்டிஷனில் எங்களது ஃபாஸ்ட் பவுலர்களை சச்சின் ஆடிய விதம் அபாரமானது. அந்த போட்டியில் 98 ரன்கள் அடித்தார் சச்சின். அதுதான் சச்சினின் பெஸ்ட் இன்னிங்ஸ் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்.
 

click me!