ஐசிசி-யின் ஐடியாவை விளாசிய விராட் கோலி

By karthikeyan VFirst Published Jan 4, 2020, 5:30 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைத்து நடத்தும் ஐசிசி-யின் திட்டத்திற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர, ஐசிசி-யும் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பல விதமான சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அடுத்ததாக ஐசிசி முன்னெடுத்திருக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

பாரம்பரியமாக 5 நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைப்பது குறித்து ஐசிசி விவாதித்து வருகிறது. ஐசிசி-யின் இந்த முயற்சிக்கு முன்னாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்திருவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான க்ளென் மெக்ராத்தும் இந்நாள் வீரரான நேதன் லயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் முயற்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் ஐசிசி-யின் திட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த விராட் கோலி, டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களை மாற்றக்கூடாது. டெஸ்ட் போடியை வர்த்தக ரீதியாக மேம்படுத்துவதற்காகவும் பொழுதுபோக்கு அம்சத்தை கூட்டுவதற்காகவும்தான் பிங்க் பந்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியே நடத்தப்படுகிறது. அதுவே என்னை பொறுத்தமட்டில் 

என்னைப் பொறுத்தவரைக்கும், டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களை மாற்றக்கூடாது. டெஸ்ட் போட்டிகளை பிங்க் பந்தில், பகலிரவுப் போட்டியாக நடத்துவதே டெஸ்ட் போட்டியை வர்த்தகரீதியாக நகர்த்துவதாகவும், பொழுதுபோக்கு அம்சத்தைக் கூட்டுவதற்காகவும் என நான் நினைக்கிறேன். எனவே என்னை பொறுத்தமட்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியே பெரிய மாற்றம்தான். அப்படியிருக்கையில், டெஸ்ட் போட்டியில் மேலும் மாற்றங்கள் செய்யக்கூடாது. 4 நாட்களாக குறைக்கலாம் என்பார்கள். சில ஆண்டுகள் கழித்து 3 ஆண்டுகளாக குறைக்கலாம் என்பார்கள். அப்படியே ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட்டே காணாமல் போய்விடும் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் கோலி.
 

click me!