மார்கஸ் ஸ்டோய்னிஸின் மற்றுமொரு அபாரமான இன்னிங்ஸ்.. ஃபின்ச் டீமை பொட்டளம் கட்டிய மேக்ஸ்வெல்&கோ

By karthikeyan VFirst Published Jan 4, 2020, 5:20 PM IST
Highlights

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், நடப்பு பிக்பேஷ் லீக் தொடரில் அபாரமாக ஆடிவருகிறார். மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
 

பிக்பேஷ் லீக் தொடரில் இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஃபின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனெகேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. 

மெல்போர்னில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ரெனெகேட்ஸ் அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், அந்த அணி 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 43 ரன்களை அடித்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 25 ரன்கள் அடித்தார். 

143 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸும் நிக் மேடின்சனும் இறங்கினர். மேடின்சன் 17 ரன்களிலும் அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த பென் டன்க் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

மறுமுனையில் நிலைத்து நின்றதுடன் அடித்தும் ஆடினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். தெளிவாகவும் சிறப்பாகவும் ஷாட் செலக்‌ஷனில் கவனமாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேப்டன் மேக்ஸ்வெல்லும் தன் பங்கிற்கு சிறப்பாக ஆடினார். 75 ரன்களுக்கு ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்பின்னர் ஸ்டோய்னிஸும் மேக்ஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டோய்னிஸ், கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஸ்டார்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். மேக்ஸ்வெல்லும் ஸ்டோய்னிஸும் இணைந்து, அதன்பின்னர் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் இலக்கை எட்டி அணியை வெற்றி பெற செய்தனர். இவர்களின் சிறப்பான பேட்டிங்கால் 19வது ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும் மேக்ஸ்வெல் 40 ரன்களையும் அடித்தனர்.
 

click me!