நடராஜரே அசந்துபோகும் அளவுக்கு அவரது போஸில் அருமையா ஆடும் இந்திய வீரர்கள்

Published : Jun 28, 2019, 04:13 PM IST
நடராஜரே அசந்துபோகும் அளவுக்கு அவரது போஸில் அருமையா ஆடும் இந்திய வீரர்கள்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவானுக்கு மிகவும் பிடித்த நடராஜா ஷாட்டை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிகவும் நேர்த்தியாக ஆடினர் இந்திய வீரர்கள். 

இந்திய  வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகிய மூவருமே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடராஜா ஷாட்டை அபாரமாக ஆடினர்.

ஷார்ட் பிட்ச், பவுன்ஸர் பந்தை ஒற்றை காலை தூக்கிக்கொண்டு, நடராஜரின் போஸ் போல ஆடும் ஷாட்டுக்கு பெயர் நடராஜா ஷாட். இந்த ஷாட்டை அடிக்கடி அபாரமாகவும் நேர்த்தியாகவும் ஆடக்கூடியவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. 

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவானுக்கு மிகவும் பிடித்த இந்த நடராஜா ஷாட்டை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிகவும் நேர்த்தியாக ஆடினர் இந்திய வீரர்கள். நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் ஒரு ஷாட் நடராஜா ஷாட். ரோஹித் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடுவார் என்பதால் இந்த ஷாட்டை அடிக்கடி ஆடுவார். 

ரோஹித்தைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரும் நடராஜா ஷாட்டை ஆடினர். 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி