ஒருவழியா டீம்ல சேர்த்துட்டாங்கப்பா.. வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்குகிறார் தினேஷ் கார்த்திக்.. இந்திய அணி முதலில் பேட்டிங்

Published : Jul 02, 2019, 02:49 PM IST
ஒருவழியா டீம்ல சேர்த்துட்டாங்கப்பா.. வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்குகிறார் தினேஷ் கார்த்திக்.. இந்திய அணி முதலில் பேட்டிங்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

பர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் திணறுகிறார். அதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட ஆடவைக்கப்படாமல் இருந்தார். இந்த போட்டியில் தான் முதன்முதலாக களமிறக்கப்பட்டுள்ளார். 

அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக கடந்த போட்டியில் ஆடிய அதே பர்மிங்காமில் தான் இந்த போட்டியும் நடக்கிறது. அங்கு பந்து பெரியளவில் திரும்பாததால் ஸ்பின் பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. எனவே குல்தீப் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் இறக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாஹல், ஷமி, பும்ரா. 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மொசாடெக் ஹுசைன், சபீர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், மஷ்ரஃபே மோர்டசா(கேப்டன்), ருபெல் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 
 

PREV
click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!