India vs West Indies: இந்தியாவின் 1000வது சர்வதேச ODI போட்டி! வரலாற்று சிறப்புமிக்க போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

Published : Feb 06, 2022, 01:39 PM IST
India vs West Indies: இந்தியாவின் 1000வது சர்வதேச ODI போட்டி! வரலாற்று சிறப்புமிக்க போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் 1000வது சர்வதேச ஒருநாள் போட்டி. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா  முழு நேர கேப்டனான பிறகு அவரது கேப்டன்சியில் ஆடும் முதல் ஒருநாள் போட்டி இது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

பிரண்டன் கிங், ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், அகீல் ஹுசைன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!