India vs South Africa: 3வது ஒருநாள் போட்டியின் டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 1:51 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. 

முதலிரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இன்று நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இந்திய அணியும், இதிலும் வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் களமிறங்குகின்றன.

கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலிரண்டு போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்டிருந்த வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் இந்த ஒரு மாற்றம் தான். மற்ற 3 மாற்றங்களும் பவுலிங் யூனிட்டில் தான் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னராக அஷ்வினுக்கு பதிலாக ஜெய்ந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷர்துல் தாகூருக்கு பதிலாக தீபக் சாஹரும், புவனேஷ்வர் குமாருக்கு  பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னர் ஷம்ஸி நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே மலான், டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ராசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஆண்டில் ஃபெலுக்வாயோ,  கேஷவ் மஹராஜ், ட்வைன் பிரிட்டோரியஸ், லுங்கி இங்கிடி, சிசாண்டா மகாலா.
 

click me!