#INDvsENG 2வது டெஸ்ட்: கோலிக்கு சாதகமான டாஸ்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..!

By karthikeyan VFirst Published Feb 13, 2021, 9:37 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட்டில் சென்னை ஆடுகளம் முதல் 2 நாட்கள் பேட்டிங் ஆடுவதற்கு சாதகமாக இருந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இது மிகவும் முக்கியமான, இந்திய அணிக்கு சாதகமான டாஸ்.

இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் பவுலர் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த டெஸ்ட் பகலிரவு(பிங்க் பந்து) டெஸ்ட் என்பதால், அதில் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம். அதனால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் இது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் பட்லருக்கு பதிலாக பென் ஃபோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சனுக்கு பதிலாக மற்றொரு சீனியர் பவுலர் ஸ்டூவர்ட் பிராடும் ஆஃப் ஸ்பின்னர் டோமினிக் பெஸ்ஸுக்கு பதிலாக மொயின் அலியும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்ச்சருக்கு பதிலாக ஆலி ஸ்டோன் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டாம் சிப்ளி, லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன்.
 

click me!