WI vs IND: கடைசி டி20 டாஸ் ரிப்போர்ட்..! கேப்டன் ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Aug 7, 2022, 8:07 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகள் முடிவில் 3-1 என இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி டி20 போட்டி நடக்கிறது.

ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன் (கேப்டன்), டெவான் தாமஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், கீமோ பால், டோமினிக் டிரேக்ஸ், ஒபெட் மெக்காய், ஹைடன் வால்ஷ், ரோவ்மன் பவல்.
 

click me!