India vs South Africa: ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் இல்லை.. சொதப்பல் மன்னனான சீனியர் வீரருக்கு கடைசி சான்ஸ்

By karthikeyan VFirst Published Dec 26, 2021, 1:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும், பின்னர் ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நியூசிலாந்து தொடரில் அறிமுகமாகி அபாரமாக விளையாடி சதமடித்து அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஆடுவாரா அல்லது தொடர்ந்து சொதப்பிவரும் சீனியர் வீரர் அஜிங்யா ரஹானே ஆடுவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் ஜாம்பவனான அஜிங்க்யா ரஹானேவிற்கே அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் அணியில் ஆடுகிறார்.

6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடுகிறது. 5 பவுலர்களில் ஷர்துல் தாகூர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் ஆல்ரவுண்டர்கள். 

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர்டசன், டெம்பா பவுமா, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ ஜான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
 

click me!