India vs West Indies: சச்சின் - கங்குலி ஜோடியுடன் சாதனை பட்டியலில் இணையும் ரோஹித் - கோலி..!

Published : Feb 04, 2022, 07:39 PM IST
India vs West Indies: சச்சின் - கங்குலி ஜோடியுடன் சாதனை பட்டியலில் இணையும் ரோஹித் - கோலி..!

சுருக்கம்

ரோஹித் சர்மா - விராட் கோலி ஜோடி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இன்னும் 94 ரன்கள் அடித்தால், சச்சின் - கங்குலி ஜோடியுடன் சாதனை பட்டியலில் இணைவார்கள்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. வரும் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளன.

ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியின் கீழ் இந்திய அணி ஆடவுள்ள முதல் தொடர் இது. ரோஹித் காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை பெற்று மீண்டும் இந்திய அணியில் ஆடவுள்ளார். 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறும் விராட் கோலியிடமிருந்தும் பெரிய சதம் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொடர் இருவருக்குமே முக்கியமான தொடராக இருக்கும்.

இந்த தொடரில் ரோஹித் - கோலி ஜோடி சில சாதனை பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் - கோலி ஜோடி 81 இன்னிங்ஸ்களில் 64.55 என்ற சராசரியுடன் 4906 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 94 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை குவித்த 3வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைக்கும் ரோஹித்  - கோலி ஜோடி.

சச்சின் - கங்குலி இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 176 இன்னிங்ஸ்களில் 8227 ரன்களை குவித்துள்ளனர். அதற்கடுத்த இடத்தில் ரோஹித் - தவான் ஜோடி உள்ளது. 112 இன்னிங்ஸ்களில் 5023 ரன்களை குவித்துள்ளனர் ரோஹித் - தவான். எனவே இன்னும் 94 ரன்கள் அடித்தால் இந்த பட்டியலில் ரோஹித் - கோலி இணைந்துவிடும்.
 
மேலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ரோஹித்தும் கோலியும் இணைந்து 982 ரன்களை குவித்துள்ளனர். இன்னும் 18 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஜோடி என்ற பெருமையையும் ரோஹித்-கோலி ஜோடி பெறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 1128 ரன்களை குவித்துள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!