India vs West Indies: இன்னும் 6 ரன் தான்.. சச்சின் டெண்டுல்கருடன் இணையும் விராட் கோலி..! செம ரெக்கார்டு

Published : Feb 04, 2022, 04:49 PM ISTUpdated : Feb 04, 2022, 05:17 PM IST
India vs West Indies: இன்னும் 6 ரன் தான்.. சச்சின் டெண்டுல்கருடன் இணையும் விராட் கோலி..! செம ரெக்கார்டு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களுடன் 12,285 ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை குவித்து பல சாதனைகளை தகர்த்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார். இந்த 2 ஆண்டுகளில் பல முறை 70-80களை கடந்த நிலையில், சதத்தை தவறவிட்டுவிட்டார்.

எனவே விராட் கோலியிடமிருந்து சதத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விராட் கோலியிடமிருந்து சதத்தை அனைவரும் எதிர்பார்ப்பதுடன், அவரே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

விராட் கோலி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் அடித்துள்ளார். அதற்கு பின் விராட் கோலி தான் இந்த மைல்கல்லை எட்டவுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!