
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என வென்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது.
24 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது.
பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை தவிர்த்துவந்த சர்வதேச கிரிக்கெட் அணிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று நீண்ட தொடரில் ஆடுகிறது.
வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஏப்ரல் 5ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதை பார்ப்போம்.
முதல் டெஸ்ட்: மார்ச் 4-8 (ராவல்பிண்டி)
2வது டெஸ்ட் : மார்ச் 12-16 (கராச்சி)
3வது டெஸ்ட்: மார்ச் 21-25 (லாகூர்)
முதல் ஒருநாள்: மார்ச் 29 (ராவல்பிண்டி)
2வது ஒருநாள் : மார்ச் 31 (ராவல்பிண்டி)
3வது ஒருநாள்: ஏப்ரல் 2 (ராவல்பிண்டி)
டி20: ஏப்ரல் 5 (ராவல்பிண்டி)