India vs Sri Lanka: இன்னும் ஒரு வெற்றி.. டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக ரோஹித் படைக்கப்போகும் அபார சாதனை

Published : Feb 26, 2022, 06:09 PM IST
India vs Sri Lanka:  இன்னும் ஒரு வெற்றி.. டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக ரோஹித் படைக்கப்போகும் அபார சாதனை

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ரோஹித் சர்மா அபார சாதனை ஒன்றை படைப்பார்.  

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். விராட் கோலி டி20 உலக கோப்பையுடன் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர், இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, அதன்பின்னர் அவர் தலைமையில் ஆடிய 2 டி20 தொடர்களில் எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்து வென்றிருக்கிறார்.

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளையும் ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடர்களை வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதுவரை இந்திய அணி 6 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடர்களை வென்றிருக்கிறது. அதில் 4 முறை ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் என்பது ரோஹித்துக்கு பெருமையான விஷயம் மட்டுமல்லாது, அவரது சாதனையும் கூட.

இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ள ரோஹித் சர்மா, அவற்றில் 22ல் வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தியாவில் ரோஹித்தின் கேப்டன்சியில் ஆடிய 16 போட்டிகளில் இந்திய அணி 15ல் வெற்றி பெற்றிருக்கிறது.

இதன்மூலம், சொந்த மண்ணில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஒயின் மோர்கன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகிய இருவருடன் பகிர்ந்துள்ளார் ரோஹித் சர்மா.  இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைப்பார். 

இன்று இலங்கைக்கு எதிராக தர்மசாலாவில் நடக்கும் போட்டியிலேயே ரோஹித் இந்த சாதனையை படைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!