India Vs England 1st Test: விராட் கோலி இடத்தில் களமிறங்கப் போவது இவரா? இந்திய அணி பிளேயிங் லெவன்!

Published : Jun 19, 2025, 03:55 PM IST
Team India players

சுருக்கம்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? விராட் கோலியின் இடத்தை பிடிக்கப் போவது யார்? என்பது குறித்து பார்ப்போம்.

India Vs England Test Series: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 20ம் தேதி) லீட்ஸில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. ஆகையால் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற கட்டாயத்தில் இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளர்கள் கவுதம் கம்பீரும் உள்ளனர். இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்துவீச்சு எடுபடும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. அதுவும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை அதிகம் கொண்ட அணி களமிறங்கியுள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு முன்பு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு லீட்ஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலிக்குப் பதிலாக கேப்டன் சும்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று துணை கேப்டன் ரிஷப் பந்த் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும் விராட் கோலி களமிறங்கும் முக்கியமான 3ம் இடம் காலியாகவே உள்ளது. இந்த சூழலில் ரன் மெஷின், அனுபவ வீரர் கருண் நாயர் மற்றும் மிகவும் திறமையான சாய் சுதர்சன் ஆகியோர் விராட் கோலியின் 3வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்குகின்றனர். கருண் நாயர் 3வது இடத்திலும், சுப்மன் கில் 4வது இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளது.

சாய் சுதர்சன், ரிஷப் பண்ட்

சாய் சுதர்சன் 5வது இடத்திலும் களமிறங்க உள்ளார். 6வது இடத்தில் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்திலும், ஷர்துல் தாக்கூர் 8வது இடத்திலும் களம் காண்கின்றனர். 9வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவும், 10வது இடத்தில் முகமது சிராஜும், 11வது இடத்தில் பிரசித் கிருஷ்ணாவும் களமிறங்க உள்ளதாக கூறஒப்படுகிறது.

கவுதம் கம்பீர் முடிவு என்ன?

இது உத்தேச பிளேயிங் லெவன் மட்டுமே. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர். ஆகவே நாளை டாஸ் போட்ட பிறகே இந்திய அணியின் அதிகாரப்பூர்வ பிளேயிங் லெவன் தெரியவரும். இந்திய அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட்டில் 6 பேட்ஸ்மேன்கள், 2 ஆல்ரவுண்டர்கள், 3 பாஸ்ட் பவுலர்கள் என்ற விகிதத்தில் விளையாடும் என எதிபார்க்கப்படுகிறது.

ஜஸ்புரித் பும்ரா சந்தேகம்

இந்திய அணி வீரர்களை எடுத்துக் கொண்டால் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் முழுமையாக உடற்தகுதியுடன் இல்லை என்பதே உண்மை. ஆகையால் தான் 23 வயதான டெல்லி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் கென்ட் கவுண்டியில் தனது திறனை நிரூபித்த அர்ஷ்தீப் சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஜெய்வாலுக்கு இங்கிலாந்தில் அனுபவம் இல்லை

முகமது சிராஜ் அணியின் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர், இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் 3.8 என்ற எகானமி விகிதத்தில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு பிளேயிங் வெலனில் இடம் உண்டு. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ்வை விட பேட்டிங்கும் செய்யும் ரவீந்திர ஜடேஜா களம் காண்கிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளிநாடுகளில் விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் சராசரியாக 45 போட்டிகளில் 2 சதங்கள் விளாசியுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடியுள்ளார். ஆனால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆனாலும் அவரது அதிரடி ஆட்டம் பிளேயிங் லெவனில் அவரை இடம்பெற செய்ய உள்ளது.

கே.எல்.ராகுல் எனும் நம்பிக்கை நாயகன்

கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் 1 அரை சதம் மற்றும் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 35. லயன்ஸ் அணிக்கு எதிராக அவர் 1 சதம் மற்றும் 1 அரை சதம் விளாசியது இந்திய அணியின் மன உறுதியை உயர்த்தியுள்ளன. கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுவது மட்டுமல்லாமல், நல்ல பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் பொறுப்பையும் தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் இதுதான்

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கலே அங்குள்ள வேகமான பிட்ச்கள் தான். லீட்ஸில் உள்ள பிட்ச் கியூரேட்டர் ரிச்சர்ட் ராபின்சன், லீட்ஸ் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதல் நாளில் உதவி புரியும். பின்பு வெப்பம் காரணமாக பிட்ச் பின்னர் சமமாகிவிடும். இதனால் பொறுமையாக களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்கள் போகப் போக ரன்கள் குவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்தின் ஸ்விங் நிலைமைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் சவாலை எதிர்கொள்வார்கள். ஏனெனில் இங்கிலாந்து பிட்ச்கள் கடந்த காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை சோதித்துள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தவிர, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் போன்ற மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்தில் அனுபவம் இல்லை என்பதால் மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

சுப்மன் கில் கேப்டன்சியில் ஜொலிப்பாரா?

ஐபிஎல்லின் உயர் அழுத்த போட்டிகளில் சுப்மன் கில் ஒரு கேப்டனாக தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், 25 வயதில், அவர் ஒரு டெஸ்ட் கேப்டனாக தன்னை நிரூபிப்பதில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்வார். 15 செஷன்களை கொண்ட ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும், அவரது முடிவுகள் அணியின் திசையை தீர்மானிக்கும், மேலும் கேப்டனின் திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

சுப்மன் கில் வெளிநாட்டு ஆடுகளங்களில் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, அனுபவம் வாய்ந்த சீனியர்கள் மற்றும் இளம் வீரர்களின் கலவையுடன் கூடிய ஒரு அணியை அவர் பெற்றுள்ளார். தனது 32 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் சுப்மன் கில் 30 சராசரியைப் பெற்றுள்ளார், 1 சதம் மற்றும் 649 ரன்கள் எடுத்துள்ளார். அவர் கெப்டன்சியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறனர்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சுப்மன் கில், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

இந்திய அணி வீரர்கள் முழு பட்டியல்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் முழு பட்டியல்: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?