அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானியா..? விக்கிபீடியாவிடம் விளக்கம் கேட்கும் இந்திய ஐடி அமைச்சகம்

By karthikeyan VFirst Published Sep 5, 2022, 12:08 PM IST
Highlights

அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என்று விக்கிபீடியாவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தொடர்பாக விக்கிபீடியா நிர்வாகத்திடம்  விளக்கமளிக்க கேட்டுள்ளது இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே துபாயில் நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி அருமையான கேமியோ ரோல் பிளே செய்தார். 20 பந்தில் 42 ரன்களை விளாசிய நவாஸின் பேட்டிங் தான், பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

இதையும் படிங்க - IND vs PAK கேட்ச்சை கோட்டை விட்ட அர்ஷ்தீப் சிங்கை வைத்து பிரிவினையை தூண்டும் பாகிஸ்தானியர்கள்

அதன்பின்னர் ஆசிஃப்  அலியும், குஷ்தில் ஷாவும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். ஷார்ட் தேர்டு மேன் திசையில் மிகவும் எளிமையான அந்த கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

அர்ஷ்தீப் கோட்டைவிட்ட கேட்ச் தான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது. இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்ட சம்பவத்தை வைத்து, பிரிவினையை தூண்ட முயல்கின்றனர் பாகிஸ்தானியர்கள். அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டதும், அவரை ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் காலிஸ்தானி என்று கூறியதாக டுவிட்டரில் பாகிஸ்தானியர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர். மேலும் பிரிவினையை தூண்டும் வகையில், அதைவைத்து டுவிட்டரில் வைரலாக்கி பிரசாரம் செய்யும் பாகிஸ்தானியர்கள், 

இதையும் படிங்க - நீ கோட்டை விட்டது கேட்ச்சை இல்லடா;மேட்ச்சை! அர்ஷ்தீப் சிங் மீது செம கடுப்பான கேப்டன் ரோஹித் சர்மா!வைரல் வீடியோ

மேலும், விக்கிபீடியாவில் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி என்று மாற்றப்பட்டிருந்தது. இந்தியர் என்பதை அடித்துவிட்டு, காலிஸ்தானி என்று மாற்றப்பட்டிருந்தது. இந்த அட்டூழியத்தையும் பாகிஸ்தானியர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்தியாவில் இருக்கும் விக்கிபீடியா நிறுவன நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். பிரிவினையை தூண்டும் வகையில் இந்த செயல் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக விக்கிபீடியா நிறுவனம் நேரில் விளக்கமளிக்குமாறு இந்திய ஐடி அமைச்சகம் கேட்டுள்ளது.
 

click me!